ராகு கேதுவால் 2020 முதல் 2022 வரை கெடுபலன் பெறும் ராசிகள் யார்? எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்…!!!

ஆன்மிகம்

ராகு கேது பெயர்ச்சி 2020 – 2022 வாக்கிய பஞ்சாங்கத்தின் படி நிகழ்ந்துள்ளது. இதில் எந்த ராசியின் நல்ல பலனும், கெடு பலனும் பெற உள்ளனர் என்பதைப் பார்ப்போம்.

குரு, சனி பெயர்ச்சி கிரகப் பெயர்ச்சியைத் தொடர்ந்து முக்கியமாக பார்க்கப்படுவது நிழல் கிரகங்களான ராகு கேது பெயர்ச்சி. இந்தாண்டு இந்த மூன்று கிரகப் பெயர்ச்சிகளும் நடைபெறுவது ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

2020 ராகு கேது பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியின் மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதத்திலிருந்து, ரிஷப ராசியில் இருக்கும் மிருகசீரிடம் 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகியுள்ளார்.

கேது பகவான் தனுசு ராசியில் இருக்கும் மூலம் 1ம் பாதத்திலிருந்து, விருச்சிக ராசியில் இருக்கும் கேட்டை நட்சத்திரம் 4ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

இந்த ராகு கேது பெயர்ச்சியைப் பொறுத்து எந்தெந்த ராசிக்கு நல்ல பலன் கிடைக்கும், மோசமான பலன்கள் ஏற்படும் என்பதைப் பார்ப்போம்.

பொதுவாக எந்த கிரகமாக இருந்தாலும் அது சுப கிரகமாகவோ அல்லது அசுப கிரகமாக இருந்தாலும் சரி, முழுவதுமாக நல்ல பலனையோ அல்லது முழுவதுமாக கெடு பலனையோ தராது.

ஒவ்வொரு கிரகமும் அவை அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து பலன்களைத் தரும். அந்த வகையில் ஒரு ராசிக்கு ராகு கேது கிரகங்கள் 3, 6, 11 ஆகிய இடங்களில் அமைந்திருந்தால் நல்ல பலனைத் தருவார்.

ராகுவால் நன்மை அடையும் ராசிகள்

ரிஷப ராசியில் ராகு அமைந்திருக்கும் நிலையில் எந்த ராசியிலிருந்து 3, 6, 11 ஆகிய ஸ்தானங்களில் ராகு அமையப் பெறுகிறது என்றால் கடகம்(11), தனுசு(6), மீனம்(3) ஆகிய ராசிகள்.

கேதுவால் நன்மை அடையும் ராசிகள்:

கேது பகவான் விருச்சிக ராசியில் சஞ்சரித்துள்ளார். இந்நிலையில் எந்த ராசியிலிருந்து 3, 6, 11 ஆகிய இடங்களில் கேது பகவான் அமைந்திருக்கிறார் என்றால் மகரம்(11), மிதுனம் (6), கன்னி(3) ஆகிய ராசிகள்.

சிம்மம் (4), கும்பம் (10) ஆகிய இரு ராசிகள் ராகு கேதுவால் நன்மை பெறும் ராசிகள்.

ராகு கேதுவால் கெடுபலன் பெறும் ராசிகள்:

ராகு 1, 7 ஆகிய இடங்களில் இருந்தாலோ அல்லது கேது 2,8 ஆகிய இடங்களில் இருந்தாலோ அந்த ராசியினர் சில கெடு பலன்களை அனுபவிப்பர்.

அந்த வகையில் ராகுவுக்கு 1, 7 ஆகிய இடங்களில் ரிஷபம், விருச்சிகம் ஆகிய ராசிகளும், கேதுவுக்கு 2, 8 ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் மேஷம், துலாம் ஆகிய ராசிகள் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

​எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும்?

ராசிக்கு 3,6, 11 ஆகிய இடங்களில் ராகு கேது அமைந்திருந்தால் கூடுதல் நல்ல பலனும், ராசிக்கு 1,2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு கேது அமைந்திருப்பின் கெடுபலனை அனுபவிக்க நேரிடும்.

ராசிக்கு 4, 10 ஆகிய இடங்களில் ராகு கேது இருப்பின் மத்திம பலன்களை அனுபவிப்பீர்கள்.

எந்த ஒரு கிரக பெயர்ச்சியாக இருந்தாலும். ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் இருக்கும் தச,புத்தியைப் பொறுத்து தான் முழு பலனைத் தீர்மானிக்க முடியும்.