யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகையா இவங்க.. இன்னும் இளமை குறையாமல் எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்..!!

செய்திகள்

இளையதளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகைகள் பலர், தற்போதும் கூட முன்னனி நடிகைகளாக இருக்கின்றனர்.. உதாரணத்திற்கு, நடிகை சிம்ரனில் ஆரம்பித்து திரிஷா, சமந்தா என சொல்லிக் கொண்டே போகலாம்… ஆனால் அவருடன் இணைந்து நடித்த ஒரு நடிகை, ஒரே ஒரு படத்தோடு அதன் பின் சினிமா பக்கமே வரவில்லை என்று தான் கூற வேண்டும்.

யார் அந்த நடிகை தெரியுமா அட வேறு யாரும் இல்லைங்க, நடிகை சாஹீன் தான்… இவர் இளைய தளபதி விஜயின் ஜோடியாக, யூத் படத்தில் நடித்திருப்பார்.. கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில் வரும் காதல் காட்சிகளாகட்டும், விவேக் மற்றும் விஜய்-ன் காமெடி சீன்களாகாட்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது… அது போக இதில் வரும் பாடல்கள் அனைத்தும் அமோக வெற்றியைப் பெற்றது…

விமர்சனரீதியாக மட்டுமில்லாமல், வசூல் ரீதியாகவும் அமோக வெற்றிப் பெற்றது.. அதில் விஜய்-க்கு ஜோடியாக, சந்தியா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்… அதிலும் குறிப்பாக ஒரு குரங்கிடம் இருந்து தன் தொப்பியை வாங்கும் காட்சிகள் எல்லாம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால், இந்த திரைப்படத்தை தொடர்ந்து, அவர் வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.. அதுவும் போக.. அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த எந்த கதாபாத்திரமும் அமையவில்லையாம். அதனால் மேற்கொண்டு நடிக்க ஆர்வம் காட்டவில்லை.. பின் அவரும் வழக்கம் போல் மும்பையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்… அதன் பின் சினிமா உலகிற்கே தலையை காட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தற்போது அவர் நிறைய புகைப்படங்களை அவருடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்… அந்தப் புகைப்படங்களை பார்த்த அனைவரும்.. அவரா இவர்? என ஆச்சர்யப்பட்டு. அதை தன் நண்பர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.. அது போக, சட்டுன்னு பார்த்தா? சுத்தமா கண்டுப்பிடிக்கமுடியல என தங்கள் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்…

அது மட்டுமில்லாமல் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது… அதனால் தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்… அவர்களின் குடும்ப புகைப்படங்களை பார்த்த அனைவரும்.. குழந்தையும் உங்களை மாதிரியே அழகா இருக்கு என் பாராட்டி வருகின்றனர்…