நம்மை விட்டு பிரிந்த தன்னிகரற்ற பாடகர் எஸ்.பி.பிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
ஒரு கச்சேரியில் SPB பங்கேற்ற போது, புல்லாங்குழல் இசை கலைஞர் ஒருவர் சற்றே தடுமாறி டியூனை விட்டுவிட்டார்.
அந்த நிலையில் இளைய நிலா பாடலை பாடிய அவர் அந்த பாடலை முடித்த உடன் இவ்வாறு கூறுகிறார். சிலசமயம் இப்படி நடப்பது சகஜம் தான்.
ஆனால் அவர் மிகவும் வருத்தப்படுகிறார். எனக்காக இன்னும் ஒரு முறை அதை வாசீப்பீர்களா” என்று கேட்டு மீண்டும் அதே பாடலை பாடுகிறார்.
மக்களின் கரகோஷங்களுடன் அந்த இடமே ஆரவாரம் செய்கிறது. இது போன்ற நல்ல மனசு யாருக்க தான் வரும் என்று வீடியோவை வைரலாக்கி ரசிகர்கள் நெகிழ்ந்து வருகின்றனர்.