சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் நாடோடிகள். இப்படத்தில் சசிகுமார் சேர்த்து வைக்கும் காதலர்களில் ஒருவராக நடித்த நடிகை சாந்தினி.
மேலும் இந்நிலையில் தற்போது சாந்தினி முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பு கார் அளித்துள்ளார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் அமைச்சர் அவரை கா தலிப்பதாக கூறி 5 வருடங்கள் குடும்பம் நடத்தியதாகவும், கருவுற்ற அவரை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவரை திருமணம் செய்ய மறுப்பதோடு, கூலிப்படையை வைத்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் மி ரட்டல் விடுப்பதாகவும். இதனால் முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.