முன்னணி நடிகர்கள்! கீர்த்தி சுரேஷை படங்களில் கமிட் செய்ய தயக்கம்.. காரணம் என்னவென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.. காரணம் இதுதான்..!!

செய்திகள்

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது தமிழில் சாணி காயிதம், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இது மட்டுமின்றி மோகன்லாலுடன் இவர் இணைந்து நடித்துள்ள மார்க்கர் மற்றும் சோலோ கதாநாயகியாக கலக்கியுள்ள குட் லக் சகி ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

மேலும் இந்நிலையில் தெலுங்கு திரையுலகில், முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடிகை கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய நடிகர்களும், தயாரிப்பாளர்களும் தயக்கம் காட்டி வருவதாக தெலுங்கு திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதே நிலைமை தற்போது தமிழிலும் ஏற்பட்டு வருவதாக சில கி சு கி சுக்கள் எழுந்துள்ளன. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது நடிகை கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்து மெலிந்து போனது தானாம்.

அதுமட்டுமின்றி கைவசம் 2 படங்கள் மட்டுமே இருக்க வேறு எந்த படத்திலும் இதுவரை நடிகை கீர்த்தி சுரேஷ் கமிட்டாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.