இங்கிலாந்து நாட்டில் முதல் முறையாக எலி ஒன்றுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.முதல் முறையாக ஒரு எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது! ஏன் தெரியுமா?
பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள க ண்ணிவெ டிகளை கண்டுபிடித்து பல மக்களின் உயிர்களை காப்பாற்றியதற்காக மகாவா என்னும் அந்த எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இயங்கி வரும் தொண்டு நிறுவனம் ஒன்று பல்வேறு விலங்குகளுக்கு இது போன்ற விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
இதற்கு முன்னதாக நாய்கள், புறாக்கள், குதிரைகள் மற்றும் ஒரு பூனைக்கு இதுபோன்ற தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை முதல் முறையாக எலி ஒன்றுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலியானது இதுவரை 15 லட்சம் சதுர அடி நிலப்பரப்பை ஆராய்ந்து அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கண்ணி வெ டிகளையும், 28 வெ டிகு ண்டுகளையும் கண்டுபிடித்துள்ளது.