உத்தரபிரதேசத்தில் 30 அடி ஆழ்துளைக் கிணற்றில் வி ழுந்த 4 வயது சிறுவனை மீ ட்கும் பணி நடைபெற்று வருகின்றது. உத்தரபிரதேச மாநிலத்தின் குல்பஹார் பகுதியை சேர்ந்தவர் Bhagirath Kushwaha, இவரது 4 வயது மகன் Dhanendra.
இவர்களுடைய வீட்டிலிருந்து சுமார் அரை கிமீ தூரத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த தந்தை Bhagirath Kushwahaயுடன் Dhanendra-வும் சென்றிருந்தார். அங்கே விளையாடிக் கொண்டிருந்த போது, சுமார் 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
உடனடியாக Dhanendra தந்தை அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
தற்போது வரை சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுவன் உ யிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Mahoba: An operation is underway to rescue the 4-year-old boy who fell into an open borewell in Kulpahar area. “Specialized teams of NDRF and SDRF are arriving. We plan to reach to the child through a tunnel which is being dug by three JCB machines,” says DM Satyendra Kumar. https://t.co/SKJqrO8awO pic.twitter.com/TWbP5Es3YL
— ANI UP (@ANINewsUP) December 2, 2020