மிகவும் நெருக்கமான அந்த மாதிரி காட்சியால் தனது திருமணத்துக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை? கல்யாணம் நடக்குமா? நடக்காதா?

செய்திகள்

நம் தமிழ் சினிமாவில் குடும்பப்படம் என்று பல ஆயிரம் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பாக இயக்குனர் விக்ரமன் படங்கள். அந்த வரிசையில் பெரியஹிட் படமாக அமைந்தது ஆனந்தம் படம். தற்போது அப்படத்தை மையமாக கொண்டு பல படங்களும் தொலைக்காட்சி சீரியல்களும் வெளியாகி வருகிறது.

அதில் தற்போது பலரின் ஆதரவை பெற்று வருகிறது, பிரபல தொலைக்காட்சி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். முக்கிய கதாபாத்திரமான முல்லை கதிர் ரோல் பல ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.எப்போதும் இந்த இரு குறிப்பிட்ட சேனல்களுக்கு இடையே இப்படி தான் போட்டி இருக்கும்.

எப்போதுதான் இருவரும் குடும்ப வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள் என்று ரசிகர்களின் ஏக்கமாகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே சித்ராவிற்கு கடந்த மாதம் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்று புகைப்படத்தையும் வெளியிட்டு ஷாக்கொடுத்தார்.

இந்நிலையில் சீரியலில் கதிர் முல்லைக்கு கண்ணத்தில் முத்தம் கொடுத்த காட்சியையும் நெருக்கமாக அணைக்கும் காட்சியையும் ஒளிப்பரப்பியது. இதனால் மாப்பிள்ளை வீட்டில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.ரசிகர்களும் மாமியார் வீட்டில் என்ன சொல்லுவாங்க திருமணத்திற்கு இதுவே ஆப்பாகிவிடுமா என்று கூறி வருகிறார்கள்