கொரோனா காரணமாக அனைத்து திரையரங்குகளும் காலவரையறையின்றி கடந்த 2020 ம் ஆண்டு மூடப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே.நட்சத்திர நடிகையான ஜோதிகாவை திருமணம் செய்த நடிகர் சூரியா திருமணத்தின் பின்பு ஜோதிகா படங்களில் இணைந்து நடிப்பதற்கு அன்புத் தடை விதித்திருந்தார்.வேறு நடிகர்களுடன் தன் மனைவி நெருக்கமாக இணைந்து நடிப்பது குடும்பத்தில் குழப்பம் தரலாம் என்பது நடிகர் சிவகுமார் கார்ந்தி போன்றவர்களும் இணைந்து எடுத்த முடிவாக இருக்கலாம்.
ஆனாலும் ஜோடியாக நெருக்கமான காதல் காட்சிகள் இன்றி நல்ல கதை உள்ள படங்களில் ஜோதிகா நடிக்க முடியும் அவருக்கு இருக்கும் புகழை வைத்து அந்த படங்கள் ஓடும் பணம் பார்க்கலாம் என சூரியா தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க நல்ல கதைகளுடன் 36 வயதினிலே , காற்றின் மொழி , பொன்மகள் வந்தாள், என படங்கள் தயாரிக்கப்பட்டன சூரியா எதிர்பார்த்தபடி அவரது காட்டில் பண மழை.தமிழ் சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர்கள் சொந்த பணத்தினை போடுவதை விட தம்மிடம் இருக்கும் பணத்தில் நிலம், கல்யாண மண்டபம், திரையரங்குகள் என வாங்கி சொத்தினை பெருக்கிவிடுவார்கள்.
தங்கள் வாழ்க்கையையும் ஆடம்பரமாக அனுபவிப்பார்கள்.பின்னர் படம் தயாரிக்கும் போது ஃபைனான்சியர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி படம் தயாரிப்பார்கள்.படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாகும் போது அந்த இலாபத்தில் கடனை திருப்பி கொடுத்துவிட்டு இலாபத்தினை எடுத்து கொள்வார்கள்.வருமான வரி செலுத்தாமலிருக்க தொண்டு நிறுவனங்களை ஆரம்பித்து செலவு கணக்குகளை அரசுக்கு அதிலிருந்து காண்பிப்பார்கள்.எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் கொரோனா வரவே படப்பிடிப்பு வேலைகள் பாதியில் நின்றது.பொன்மகள் வந்தாள் படம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டாலும் கொரோனா காலத்தில் டப்பிங், படத்தொகுப்பு வேலைகளை முடித்தார்கள்.
படத்தினை திரையரங்கில் வெளியிடமுடியாத சூழ்நிலை. மாதா மாதம் வட்டி பணம் செலுத்த வேண்டும்.பொறுத்து பார்த்த்த சூரியா இது வேலைக்கு ஆகாது என எண்ணி தன் பொன்மகள் வந்தாள் படத்தினை அமேசன் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிட தீர்மானித்தார்.பலகோடி கொடுத்து வாங்க அமேசன் தயாரானது.
இது தான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த அமேசன் நிறுவனம், பொன்மகள் வந்தாள் படத்தினை நீங்கள் கேட்கும் விலைக்கே வாங்கி கொள்கிறோம். படம் அதிகம் பேர் பார்த்த்தால் எங்களுக்கு இலாபம். ஆனால் படம் ஓடிடியில் அதிகம் பேர் பார்க்காமல் போய் தோல்வியடைந்தால் எங்களுக்கு நட்டம் ஏற்படும் அப்படி நட்டமடைந்தால் அடுத்து நிங்கள் நடிக்கும் படத்தினையும் எங்கள் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என நிபந்தனை போட்டது.
ஜோதிகா படம் மக்களிடம் பெரு வரவேற்பை பெற்று அமேசனுக்கு இலாபத்தை தரும் என நம்பிய சூரியா அதற்கு ஒத்து கொண்டதால் ஒரு பொன்னான நன்நாளில் பொன்மகள் வந்தாள் ஓடிடிக்கு வந்தாள்.அதற்கு முன்னர் திரையரங்கிலிருந்து தூக்கிய ஓடிமுடித்த படங்கள், வெப் சீரிஸ், குறைந்த பட்ஜட் படங்கள், வயது வந்தோருக்கான சென்சாரில் அனுமதி மறுக்கப்பட்ட படங்களே தியேட்டர் கிடைக்காமல் ஓடிடியில் வெளியாகி வந்தது.
பொன்மகள் வந்தாள் படத்தை பலர் பாராட்டிய போதும் ஓடிடிக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை.அதனால் சூரியாவின் அடுத்த படமான சூரரை போற்று படத்தினையும் ஓடிடியில் வெளியிடுமாறு அழுத்தம் கொடுத்தது.படம் ஓடினாலும் படுத்தாலும் போட்ட பணம் இலாபத்துடன் தயாரிப்பாளருக்கு கிடைத்துவிடும். எனவே சூரியா சூரரை போற்று படத்தினை ஓடிடிக்கு கொடுத்தார்.ஓடிடி தளங்கள் பெரிய நட்சத்திர நடிகர்களின் படத்தினை என்ன விலை கொடுத்தாவது வாங்கி வெளியிட்டால் ஓடிடி தளங்களுக்கு தமிழ் மக்களிடையே பாரிய வரவேற்பு கிடைத்துவிடும் அதனை தொடர்ந்து தங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ளலாம் அதற்கு இந்த கொரோனா காலகட்டமே தக்க சமயம் என கணக்கு போட்டன.ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இதனை எதிர்த்து சண்டைபோட ஆரம்பித்தது.
சூரியா தனிமைப்படுத்தப்பட்டார்ஓடிடிக்கு மக்கள் மாறிவிட்டால் திரையரங்குகளுக்கு மக்கள் வர விரும்ப மாட்டார்கள். அதிலும் மாஸ் ஹீரோ நடிகர்களின் படங்கள் ஓப்பணிங் காட்சிகள், கட்டவுட் பாலாபிசேகம் எனதிரையரங்கு கொண்டாட்டங்களை மையமாக கொண்டே பண வசூலை அள்ளுகின்றன.எனவே பெரிய நடிகர்களின் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியானால் தங்கள் வருவாய் அடிவாங்கும் என வாதிட்டார்கள்.இதற்கிடையில் சூரரை போற்று ஓடிடியில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.ஆனால் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற நடிகர்கள் தங்கள் படங்களை எவ்வளவு காலமானாலும் ஓடிடிக்கு தரமாட்டோம் திரையரங்கு திறந்தால் சந்திப்போம் என்றுவிட்டனர்.
எல்லா மாடும் ஓடுகின்ற பந்தையத்தில் குப்பு சாமியின் காய்ந்த மாடும் ஓடி விழுந்ததை போல சிம்புவும் தன் படத்தை ஓடிடிக்கு தரமாட்டேன் என்றார்.சிம்புவின் ஈஸ்வரன் திரையரங்குக்கு வந்தாலும் பார்க்க ஆளின்றி துர்க்கப்பட்ட பின் ஓடிடிக்கு வந்தது சோக கதை.முன்னரே சொன்னது போல விஜயின் மாஸ்டர் திரையரங்குக்கு வந்து தியேட்டர் உரிமையாளர்களின் வயிற்றில் பாலை வார்த்தது.ஜோதிகா சூரியா குடும்ப விவகாரம் படத்தயாரிப்பில் ஆரம்பித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவில் எதிரொலித்து தற்போது நடுத்தெருவில் ஊடகங்களால் பேசப்படுமளவுக்கு வந்து நிற்கின்றது.ஆனால் சூரியாவுக்கும் திரையரங்கு சங்கத்தினருக்கும் ஏற்பட்ட பஞ்சாயத்து இன்னமும் தீர்க்கப்படாமல் இழுபறியிலேயே உள்ளது.இனி சூரியா படங்கள் திரையரங்குகளில் வெளியாகுமா?சூரியா செய்தது சரியா? தவறா?