மற்ற அனைத்து கோவில்களில் குங்குமம் தரும் போது ஆஞ்சநேயர் கோவிலில் மட்டும் செந்தூரம் தருவது ஏன் தெரியுமா…?

ஆன்மிகம்

பக்தர்கள் அனைவரும் அனுமனை வழிபடக் கூடிய அனைத்து ஆலயங்களிலும் செந்தூரம் வழங்குவார்கள். இதற்கு காரணம் என்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் இந்த செந்தூரப் பொட்டு எதற்காக வழங்கப்படுகிறது  என்பதற்கு இராமாயணத்தில் ஒரு கதை உள்ளது. ஒரு முறை சீதாதேவி தன்னுடைய நெற்றியில் செந்தூரப் போட்டு வைத்திருந்தார். அதைப் பார்த்த அனுமன் தாயே எதற்காக செந்தூரம் வைத்துள்ளீர்கள் என்று அனுமன் கேட்டார்.

அப்போது சீதை தன் கணவரான ஸ்ரீராமர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்பதற்காக செந்தூரம் வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதைக் கேட்ட அனுமன் உடனடியாக சென்று தன் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டார்.

ராமர் நலமுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உள்ளது. ஆனால் அந்த எண்ணம் அனுமனிடம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இதன் காரணமாக தான் அவர் தன் உடல் முழுவதிலும் செந்திரத்தைப் பூசிக்  கொண்டார் அனுமன்.

மேலும் இந்த செந்தூரத்தை ஆண்கள் இட்டுக் கொண்டால் அவர்களுக்கு செல்வம் அதிகரிக்கும். பெண்கள் இட்டுக் கொண்டால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். மேலும் செந்தூரம் மருத்துவகுணம் உடையது. இது தீராத நோய்களை தீர்க்கக்கூடியது. மேலும் ஆஞ்சநேயர் கோவிலில் கொடுக்கப்படும் செந்தூரம் இவை குங்குமத்தையும், வெண்ணைய்யையும் சேர்த்து செய்தவையாகும்.