மறைந்த நடிகர் சிரஞ்சீவி இந்த பூமிக்கு இரட்டை வேடமிட்டு வந்துள்ளார்.. தீயாய் பரவிய புகைப்படம்

செய்திகள்

மறைந்த பிரபல நடிகரும், அர்ஜுனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சர்ஜாவிற்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.

கடந்த ஜுன் மாதம் நெஞ்சுவலி காரணமாக சிரஞ்சீவி(39) மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.

அப்போது இவரது மனைவி மேக்னா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது மேக்னாவிற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வந்துள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வந்துள்ளனர்.

குறித்த புகைப்படம் குறித்து மேக்னா கூறுகையில், இது பொய்யான தகவல் என்றும், இம்மாதிரியான புகைப்படங்களை யாரும் நம்ப வேண்டாம். தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றும் தகவல்கள் எதுவாக இருந்தாலும் நானே நேரடியாக கூறுவதாக தெரிவித்துள்ளார்.