மனிதநேயம் வறண்டு போனது இல்லை இல்லை இறந்து விட்டது… என்றே சொல்லலாம்…! அதற்கு இந்த ஒற்றைப்படமே ஆயிரம் சாட்சி…!!

செய்திகள்
மனம் இருந்தால் புளிய மரத்தின் இலையில் கூட இருவர் அமரலாம் என்பதும் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதும் பழமொழி. ஆனால் இன்று கால சூழ்நிலைகளின் மாற்றத்திலும், நாகரீகம் என்னும் பெயரிலும் மனிதநேயம் காவு கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு இந்த ஒற்றைப் புகைப்படமே சாட்சி.
மனிதர்கள் மேல் மட்டுமல்ல ஆடு மாடு இவற்றின் மேல் உள்ள பாசம்… வீட்டு ரேசன் கார்டில் பேரை சேர்க்க கேட்கும்.. என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்தில் வரும் பாடல் வரியை போலத்தான் தமிழர்களின் வாழ்வு. அன்பு என்றால் தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்கும் கர்ணனாக மாறிவிடுவார்கள். ஆனால் அப்படி அன்பு நிறைந்த மனிதர்கள் உள்ள இம்மண்ணில் இப்படியும் சில சம்பவங்கள் நடந்து தான் வருகிறது.
மனிதனுக்கு அவசியத் தேவையான உணவு, உடை இதற்கு அடுத்ததாக அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது உறைவிடம். வீடு இல்லாத பலருக்கும் இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் கடைகளின் வாசற் படிகள் தான் உறைவிடம். இது அந்த கடையின் உரிமையாளர்களுக்கும் தெரியும். இன்னும் சில நல்ல மனது படைத்த முதலாளிகள் இவர்களுக்கு இரவில் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க கொசுவர்த்தி சுருள் கூட வாங்கிக் கொடுப்பார்கள்.
இங்கே கீழே உள்ள இந்த புகைப்படத்தைப் பாருங்கள். யாரோ ஒருவரின் கடை இது. கடை வாசலில் உள்ள படிக்கட்டுகளில் கம்பி முள்கள் அமைத்து அதையும் பூட்டு போட்டு பூட்டியுள்ளார். இதனால் மற்றவர்கள் யாரும் கடையின் வாசலில் அமர்ந்து இளைப்பாறவோ, இரவு நேரத்தில் படுக்கவோ முடியாது. காலையில் அவர் கடையைத் திறக்கும் போது, பூட்டைத் திறந்து வாசலில் இருக்கும் முள்வேலி போன்ற கம்பி படியை தனியாக அகற்றிவிட்டு உள்ளே செல்கிறார்.