மத்திய அரசு செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது..!!

செய்திகள்

சில மாநிலங்கள் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளன

நான்காம் கட்ட அன்லாக் தொடங்கியுள்ள நிலையில், சில மாநிலங்கள்,கட்டுபாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளன. எனினும், இந்த மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில், பெற்றோர்கள் அனுமதியுடன் தங்கள் ஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற அனுமதிக்கப்படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நான்காம் கட்ட அன்லாக் தொடர்பான வழிகாட்டுதல்களின்படி, சில மாநிலங்கள் செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளன. ஆனால் 9 முதல் 12 வகுப்புகளுக்கு மட்டுமே.

கடந்த மாத தொடக்கத்தில், உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் இறுதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் ஆன்லைன் கற்பித்தலை எளிதாக்குவதற்காக பள்ளிகள் 50% ஆசிரியர்களை அழைக்கலாம் எனவும் கூறியிருந்தது. தவிர, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பாடம் தொடர்பான தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள பள்ளிகளுக்கு ‘தன்னார்வ அடிப்படையில்’ செல்லலாம் என கூறியிருந்தது.

இதை அடுத்து சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளன.

டெல்லி: கடந்த வாரம், தேசிய தலைநகரில் அரவிந்த் கெஜர்வால் தலைமையிலான அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு,  கட்டுபாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது.

எனினும், இந்த மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில், பெற்றோர்கள் அனுமதியுடன் தங்கள் ஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற அனுமதிக்கப்படலாம் என்று கேஜரிவால் அரசு தெரிவித்துள்ளது.

பீகார்: பாட்னா மாவட்ட குமார் ரவி, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே கல்வி நிறுவனங்கள், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை மீண்டும் தொடங்க அனுமதித்துள்ளார். இருப்பினும், நிதீஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு செப்டம்பர் 30 வரை க ட்டுப்பாட்டு மண்டலங்களில் முழுமையான லா க்டவுனை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

ஆந்திரா: ஆந்திராவில் உள்ள பள்ளிகளும் செப்டம்பர் 21 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சாதாரண வகுப்புகளை மீண்டும் தொடங்க உள்ளன. இது தொடர்பாக பள்ளி அதிகாரிகளும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்.