மதுராந்தகம் அருகே மண்ணை தோண்டிய போது கிடைத்த அதிசயம்!! இன்ப வெள்ளத்தில் மக்கள்…!!

செய்திகள்

மதுராந்தகம் அருகே ஏரியை தூர்வாரும் போது 6 அடி நீள சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

செங்கல்பட்டின் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டூர் ஊராட்சிக்குட்பட்ட மதுராகுருவாபதன்மேடு கிராமத்தில் ஏரி குடிமராத்து பணிகள் நடந்து வருகிறது.

ரூ.40 லட்சம் செலவில் பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் உள்ள மண்ணை அள்ளி கரையில் போட்டனர்.

அப்போது பொக்லைன் எந்திரத்தில் 6 அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

இதனை கேள்விப்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டதுடன் ஏரிக்கரை அருகே வைத்து வழிபாடு செய்தனர்.

மதுராகுருவாபதன்மேடு கிராமத்தில் சிவன் கோவிலோ, பெருமாள் கோவிலோ இல்லாத நிலையில் அங்கு சிவலிங்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.