மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்: நாளை மதுபானக்கடை மூடப்படுகிறது.!

செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு சுமார் 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.

அரசு விதிமுறைப்படி 2 வருடம் பணிபுரிந்தாலே பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். ஆனால் 17 வருடங்களாக பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்கள் இதுவரையில் பணி நிரந்தரம் செய்யபடவில்லை.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அனைத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும், 50 லட்சம் மருத்துவக் காப்பீட்டில் டாஸ்மாக் பணியாளர்களை சேர்த்தல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  கோரிக்கை அட்டை அணிந்து ஒரு வாரமாக டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய போராட்டத்திற்கு தமிழக அரசு இதுவரையில் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில் நாளை வேலைநிறுத்தம் செய்யப்போவதாக டாஸ்மாக் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்படி வரும் 25ஆம் தேதி(நாளை) காலை 10 மணி முதல் 12 மணி வரை இரண்டு மணி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக டாஸ்மாக் கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இந்த இரண்டு மணி நேரம் மட்டும் மதுவிற்பனை தடை பட வாய்ப்புள்ளது.