ப்ளீஸ் யாரவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க.. குறிப்பாக இந்த பூம்பூம் மாட்டுக்காரரை தேடும் ஜிவி பிரகாஷ்!! அதுவும் ஏன்னு தெரியுமா??

வைரல் வீடீயோஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் இசையமைக்கும் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து செம ஹிட்டாகும். இவரது பாடலுக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக களமிறங்கி அசத்தலாக நடித்தும் வருகிறார். அவரது கைவசம் தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், 4 ஜி, ஜெயில், காதலிக்க நேரமில்லை, காதலியை தேடி நித்யானந்தா, பேச்சிலர் என ஏராளமான படங்கள் உள்ளன. மேலும் ட்ராப் சிட்டி என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் ஜிவி பிரகாஷ் நடிக்கிறார்.

இந்நிலையில் சாலையோரம் பூம்பூம் மாட்டுக்காரர் நாதஸ்வரம் வாசிக்கும் வீடியோவை நெட்டிசன் ஒருவர் இணையத்தில் பகிர்ந்து, இவரது வாசிப்பையும், இருக்கும் நிலைமையும் பாருங்கள் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோவை கண்ட ஜிவி பிரகாஷ் இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால், நாம் அவரை பாடல் பதிவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவரது குறிப்புகள் மிக திறமையாகவும், துல்லியமாகவும் உள்ளது என கூறியுள்ளார். இந்நிலையில் நெட்டிசன்கள் கண்டிப்பாக தெரிந்தால் சொல்கிறோம் என கூறியுள்ளனர்.