ப்ப்பா! பேபி சாராவா இது? பதினைந்து வயதில் நடிகை சாரா எப்படி இருகிறாங்க தெரியுமா? பார்த்தால் அசந்து போயிடுவீங்க..!!!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ஜொலித்த பல ஹீரோயின்களும் தற்போது சினிமாவில் நல்ல இடத்தில் இருக்கின்றனர். ஆரம்பத்தில் முக்கிய நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டு பின்னர் அது மக்களுக்கு பிடித்து போகவே பின்னர் அதே போன்று பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கும் பல நடிகைகளை பார்த்து இருப்போம்.

இப்படி அவர்களே பின்னலில் ஹீரோயின்களாக பிரபல நடிகைகளுக்கு ஜோடி போடும் வாய்ப்பும் மக்களுக்கு கிடைக்கும். இப்படி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்களின் மனதை கொள்ளையடித்தவர் தான் பேபி சாரா, இவர் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வ திருமகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

இவர் ஒரே திரைப்படத்தில் நடித்ததன  மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பின்னர் சைவம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக அறிவிப்புகள் வெளியாகி அந்த படத்தில் நடித்து முடித்தார்.

இந்த திரைப்படமும் ஓரளவிற்கு ரசிகர்களை திருப்தி படுத்தியது. பின்னர் பல தெலுங்கு பட வாய்ப்புகள் குமியவே இவர் கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தார், இப்படி அடிக்கடி ரசிகர்களின் பார்வையில் சிக்கிய இவர் தற்போது ஹீரோய்னாக போகிறார் என்ற செய்தி சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது.

அதுவும் யார் படத்தில் என்றால் உங்களுக்கு இன்னும் ஆச்சர்யம் தான் இயக்குனர் மணிரத்னம் இயக்கம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் இளம் நடிகையாக அறிமுகமாக போகிறார் என்று கோலிவூட் வட்டாரங்கள் உறுதி படுத்துகின்றனர். எது எப்படியோ என்னையறிந்தால் புகழ் பட பேபி அணிகா போல இவரும் புகழடைய வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர் .