ப்ப்பா தெறி படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க செம்ம கியூட் புகைப்படம் இதோ..!!

செய்திகள்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்டம் தெறி. காவல்துறை அதிகாரியாக விஜய் மிரட்டலான நடிப்பில் அசத்தி இருப்பார். படத்தில் விஜய்க்கு அம்மாவாக பிரபல நடிகை ராதிகா நடித்திருப்பார்.

விஜய்க்கு ஜோடியாக சமந்தாவும், முக்கிய வேடத்தில் நடிகை எமி ஜாக்சனும் நடித்திருப்பார்கள். இந்த படத்தின் வெற்றிக்கு மேலும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது நடிகை மீனாவின் மகள் நைனிகாதான்.

தனது அழகான நடிப்பால் படம் பார்க்கும் அனைவரையும் மிகவும் ஈர்த்திருப்பார் பேபி நைனிகா. படத்தில் முதலில் விஜய், சமந்தாவுக்கு கை குழந்தையாக ஒரு பெண் குழந்தை நடித்திருக்கும். விஜய், சமந்தா, அந்த குழந்தை மூவரும் வரும் பாடல் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில் அந்த பாடலில் மிகவும் சிறு குழந்தையாக வரும் அந்த பெண் குழந்தை தற்போது நன்கு வளர்ந்துவிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.