நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு திரைத்துறையில் முன்னணி ஹீரோயினாக உள்ளார். இரு மொழிகளிலும் அவர் நடித்துள்ள பல படங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளன.படத்திற்காக எப்படிப்பட்ட ரிஸ்க்கையும் எடுக்க தயங்கமாட்டார் என்பது இவர் நடித்த படங்களிலேயே தெரியும்.
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக குண்டான எடையை குறைக்க பெரும் சிரமப்பட்டார்.இதனால் பட வாய்ப்புகள் குறைந்ததால் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று எடையை குறைத்தார். இந்நிலையில் அனுஷ்கா, அமிதாப்பச்சன், சிரஞ்சீவியுடன் ரைசா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார்.
மேலும், இவருக்கு திருமணம் என்ற தகவல் அவ்வபோது தோன்றி கானல் நீராய் மறைந்து விடுகின்றது. இவருடைய ஜாதகத்தில் உள்ள பிர ச்சனை தான் இவற்றிக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ஒரே ஒரு படத்தில் நடிக்க நிஜமாகவே உடல் எடையை ஏற்றி பிறகு குறைக்க முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார் அம்மணி. உடல் எடையை குறைத்தாலும் மீண்டும் உடல் எடை கூடி விடுகின்றதாம்.
இதனால், கடு ம் மன உழை ச்சலில் இருக்கிறார் அனுஷ்கா. இதனால், பட வாய்ப்புகளும் இவருக்கு வருவது கிடையாது. இந்நிலையில், தற்போது தன்னுடைய அடுத்த தெலுங்குப் படத்தை முடிவு செய்துள்ளார் அனுஷ்கா.
இதனை ‘பாகமதி’ படத்தைத் தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தை மகேஷ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் முன்னதாகவே முடிந்துவிட்டதாகவும், கரோனா அச் சுறுத்தல் முடிந்தவுடன் முறையாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் தெரிகிறது.
ஹீரோயின் சப்ஜெக்ட் படமான இந்த படத்தில் நடிகை அனுஷ்கா பிகினி உடையில் நடிக்க வுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட அஜித்தின் பில்லா படத்தில் முதன் முறையாக பிகினி உடையில் தோன்றி இளசுகளை சொக்க வைத்தார் அனுஷ்கா.
அதன் பிறகு, பல வருடங்கள் கழித்து இப்போது பிகினி உடையில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அனுஷ்கா. இது அவரது ரசிகர்களை அதி ர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த உடம்பை வைத்துக்கொண்டு பிகினி உடையா..? என்று அனுஷ்காவின் முடிவை பார்த்து வாயை பிளந்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
முன்னதாக, கடந்த வருடம் வெளியான ஆசியாவின் TOP 100 கவர்ச்சியான பெண்கள் என்ற பட்டியலில் நடிகை அனுஷ்கா ஷெட்டி 8-வது இடத்தை பிடித்திருந்தார். மேலும், பிகினி காட்சியில் நடிக்க உடல் எடையை கணிசமனா குறைக்க உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம் அம்மணி.