பொம்பளை கிட்டகேக்குறயே “சிவக்குமார்” மனுசனா நீ ?? அப்படி என்ன தான் கேட்டார்..!! சரத்குமார் ஆவேசம் !!

வைரல் வீடீயோஸ்

நடிகர் சரத்குமார் பேசிய வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் நடிகர் சிவகுமாரை வெளுத்து வாங்கியுள்ளார் நடிகர் சரத்குமார். தனது மனைவி ராதிகா சரத்குமார் அவர்களிடம் ஒரு ஈனத்தனமான கேள்வியை சிவகுமார் கேட்டுள்ளார், அதை கேள்விப்பட்டு தனது மனம் வேதனை அடைந்தது என வேதனையுடன் பேசிய சரத்குமார்; இதை கேள்விப்பட்டு எனது கோபத்தை அடக்கி வைத்திருந்தேன் எனவும் கூறினார்.

தனது மனைவி ராதிகா அவர்கள் வார்த்தைக்கு வார்த்தை சிவகுமார் அண்ணன் என்று அன்பாக அழைப்பவரிடம், ஏன்மா உன் கணவர் சரத்குமார் சினிமா எடுத்து உன்னுடைய சொத்துக்களை அழித்து விட்டாராம் என கேள்வி கேட்டுள்ளார்.

இது கேட்க வேண்டிய கேள்வியா? அப்படிப்பட்டவன் கிடையாது இந்த சரத்குமார். என்னுடைய சொத்துக்களை எழுதி கொடுத்து என் மனைவி நன்றாக வாழ வேண்டும் என்று நினைப்பவன் நான், என்று அதில் பேசியுள்ளார் சரத்குமார்.

எனது உறவுகளும், நண்பர்களும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். கொடுத்து பழக்கப்பட்ட நான் தான் உண்மையான கர்ணன். சிவகுமார் கேட்ட கேள்விக்கு நேரில் அவர் வீட்டிற்கே சென்று சிவகுமார் பார்த்து பேசுங்கள் என நேருக்கு நேராக கேட்டிருப்பேன், ஆனால் அண்ணன் என்று ஆசையாக அழைத்து பேசிய மரியாதைக்காக நடிகர் சிவகுமாரை விட்டு வைத்துள்ளேன். என் மனைவி சொத்தை விற்கும் அளவுக்கு நான் கேவலமானவனா?

எனது உடலின் வலிமை இல்லையா? எனது மனைவி சொத்தை விற்கும் அருகதை எனக்கு இருக்கிறதா? எனக்கு 65 வயது ஆனால் 25 வயது இளைஞனை எதிர் கொள்ள எனது உடலில் வலிமை உள்ளது. நீங்கள் என்ன வேண்டுமானால் பேசுவீர்கள். மூத்த நடிகர் என நங்கள் வாய் மூடி அமைதி காக்க வேண்டுமா, என்ன ஒரு ஈனத்தனமான கேள்வி சிவகுமார்?, தைரியம் இருந்தால் ஆம்பளைக்கு ஆம்பளை என்னை வந்து கேள்வி கேள், ஏன் பெண்களிடம் கேட்கிறாய்.

என்னை பார்த்து கேள்வி கேட்கும் நீயெல்லாம் மனுசனா சிவகுமார்? என்று ஆவேசமாக நடிகர் சரத்குமார் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சிவகுமார் மருமகள் நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசிய சர்ச்சை பேச்சின் எதிரொலியாக வைரலாகி வரும் நடிகர் சரத்குமார் பேசிய இந்த வீடியோ, கடந்த நடிகர் சங்க தேர்தலின் போது சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்வில் சரத்குமார் பேசியதாக கூறப்படுகிறது.