பொங்கல் பண்டிகை தினத்தில் எந்தெந்த ராசியினர்கள்.. எந்த பொருளை தானம் செய்தால் வீட்டில் செல்வம் நிலைத்து நிற்கும்.. தெரியுமா? இதோ பாருங்க..!!

ஆன்மிகம்

மேஷம்:

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். எனவே மேஷ ராசிக்காரர்கள் பிரகாசமான எதிர்காலத்திற்காக பொங்கல் பண்டிகை தினத்தில் வெல்லம் மற்றும் எள்ளு விதைகளை தானமாக வழங்க வேண்டும்.

ரிஷபம்:

ரிஷப ராசிகிகாரர்கள், பொங்கல் பண்டிகை நாளில் வறுமையில் வாடுபவர்களுக்கு புதிய ஆடைகளை வாங்கி தானமாக கொடுக்கலாம். அதோடு எள்ளு விதைகளையும் தானமாக வழங்குவது நல்லது.

மிதுனம்:

மிதுன ராசியின் அதிபதி புதன். ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகையின் போது எள்ளு விதைகள் மற்றும் முலாம் பழத்தை தானமாக வழங்குவது அதிர்ஷ்டத்தை அளிக்கும்

கடகம்:

கடக ராசியின் அதிபதி சந்திரன். எனவே இந்த ராசிக்காரர்கள் இந்த வருடம் அதிர்ஷ்டமானதாக இருக்க பொங்கல் பண்டிகையன்று எள்ளு விதைகள், பழங்கள் மற்றும் ஆடைகளை தானமாக வழங்க வேண்டும்.

சிம்மம்:

சிம்ம ராசியினர்கள் கம்பீர குணத்தைக் கொண்டவர்கள். இவர்கள் பொங்கல் பண்டிகையை தினத்தில் எள்ளு விதைகள் மற்றும் போர்வையை தானமாக வழங்கினால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.

கன்னி:

கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகையன்று எள்ளு, போர்வைகள், எண்ணெய் மற்றும் உளுத்தம் பருப்பை தானம் செய்வது நல்லது.

துலாம்:

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் சந்தனம், பால் மற்றும் அரிசி போன்றவற்றை தானம் செய்வது நல்லது. இதனால் இந்த வருடம் இவர்களுக்கு பிரகாசமாக இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகையின் போது அரிசி மற்றும் பருப்பு வகைகளை தானமாக வழங்குவது நல்லது.

தனுசு:

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் பொங்கல் தினத்தன்று எள்ளு விதைகள் மற்றும் கடலைப் பருப்பை தானமாக வழங்குவது, அதிர்ஷ்டத்தை அளிக்கும்.

மகரம்:

மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் எண்ணெய், எள்ளு விதைகள், போர்வை அல்லது புத்தகங்களை தானமாக வழங்குவது, அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் அளிக்கும்.

கும்பம்:

கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் பொங்கல் பண்டிகையின்று எள்ளு விதைகள் மற்றும் எண்ணெயை தானமாக வழங்குவது நல்லது.

மீனம்:

மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்திற்காக பொங்கல் பண்டிகை நாளில் எள்ளு விதைகள், எண்ணெய், போர்வை அல்லது புத்தகங்களை தானமாக வழங்க வேண்டும்.