பெண்கள் பயன்படுத்தும் இந்த ஹேண்ட்பேக் விலைய கேட்டாலே எல்லாரும் தெறிச்சு ஓடுறாங்க.. இந்த ‘ஹேண்ட்பேக்’ல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

செய்திகள்

இத்தாலியின் போரினி மிலானேசி நிறுவனம் உலகிலேயே 53 கோடி ரூபாய் மதிப்புள்ள பெண்கள் கைப்பையை தயாரித்துள்ளது. பெண்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இருப்பது கைப்பைகள். மேக்கப், ஆடை, ஆபரணங்கள் முதலியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை கைப்பைகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

மேலும் அந்த வகையில் அனைத்து தரப்பு பெண்களும் பயன்படுத்தும் வகையில் பல்வேறு விலைகளில் அவை கிடைத்தாலும், மிகப்பெரிய செல்வந்தரும் ஆச்சரியப்படும் படி, ஒரு குறிப்பிட்ட கைப்பையின் விலை அமைந்துள்ளது. அதன் விலை ரூ.53 கோடி. அப்படி அந்த கைப்பையில் என்ன தான் உள்ளது?

மட்காத பிளாஸ்டிக்குகளால் மாசுபடும் கடல்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கைப்பைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வரை 3 கைப்பைகளை மட்டும் தயாரித்துள்ள இந்த நிறுவனம் ஒவ்வொரு பையை தயாரிக்கவும் ஆயிரம் மணி நேரத்தை எடுத்துள்ளது.