பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் ராட்சத விண்கல் : விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்!!

செய்திகள்

ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிலோ மீற்றல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஒரு சிறுகோள் தற்போது பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோள் அளவில் பெரியது. இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களை சேர்த்தது போன்ற அளவுடையது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுகோள் பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிலோ மீற்றர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், அளவில் பெரியது என்றாலும் இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த பாதிப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது செப்டம்பர் 14ம் திகதி பூமியைக் கடந்து செல்லும் என தெரிவிக்கப்படுள்ளது. சிறுகோள் அளவில் பெரியது தான். ஆனால் இது பூமியின் மீது மோத வாய்ப்பில்லை. அதாவது விண்கல்லின் அளவு மற்றும் பூமிக்கு அருகாமையில் செல்லும் தூரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதன் அபாயத்தை நாசா கணக்கிடுகிறது.

அதன்படி விண்கல் 2020 கியூஎல் 2 நாசாவால் அ பாயகரமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், இது பூமியைத் தா க் கு ம் வாய்ப்புகள் ஏதும் இல்லை என்றே தெரிகிறது. இதுபோன்ற சிறிய கோள்கள் ஒவ்வொரு மாதமும் பூமியைக் கடந்து சில நேரங்களில் மோதுகின்றன, ஆனால் அவை மோதியதும் அழிந்துவிடும் என்று நாசா கூறியுள்ளது,

சி.என்.இ.ஓ.எஸ் படி, 0.05 வானியல் அலகுகளுக்குள் (4.6 மில்லியன் மைல்கள்) வந்து 140 மீட்டர் (460 அடி)க்கும் அதிகமான விட்டம் கொண்ட விண்வெளி பொருள்கள் அபாயகரமானவை என்று பெயரிடப்பட்டுள்ளன.இதன் மூலம், விண்கல் 2020 கியூஎல் 2 அபாயம் என கருதப்படுகிறது. இருப்பினும், அந்த விண்கல் பயணித்து வரும் பாதையை கருத்தில் கொண்டு, இது பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் ஏதும் இல்லை என்றே தெரிகிறது.

பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்வதாகவும், அடுத்த 100 ஆண்டுகளில் விண்கல் மோ து ம் அ ச்சுறு த்தல் இல்லை என்றும் சமீபத்தில் நாசா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.