பூமராங் படத்திற்காக அதர்வா எடுத்த மூன்று முகப் போராட்டம் வித்தியாசமான முயற்சி..!!

செய்திகள்

ஆர். கண்ணன் தயாரித்து இயக்கும் பூமராங் படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார் அதர்வா. அதற்காக ‘ப்ரோஸ்தடிக்’ வகையில் மேக்கப் செய்து கொள்கிறாராம்.

இதற்காக ‘பத்மாவத்’, நவாசுதீன் சித்திக் நடித்த ‘மாம்’, அமிதாப், ரிஷி கபூர் நடித்த 102 நாட் அவுட் ஆகிய படங்களில் இப்படி ‘ப்ரோஸ்தடிக்’ மேக்கப்பால் புகழ்பெற்ற ‘ப்ரீத்திஷீல் சிங்’ மற்றும் ‘மார்க் ட்ராய் டிஸோசா’ வை அழைத்து வந்து அதர்வாவுக்கு மேக்கப் பட வைத்திருக்கும் ஆர்.கண்ணன் இது குறித்து கூறியது.

“பூமராங்’கில் அதர்வாவின் கதாபாத்திரம் மூன்று தோற்றங்களால் உருவாக்கப்பட்டது. எனவே படத்துக்கு தேவையான தோற்றங்களை இறுதி செய்ய மும்பைக்கு சென்றோம். மேக்கப் துறையில் வல்லுனர்களான ப்ரீத்திஷீல் சிங், மார்க் ட்ராய் டிஸோசாவை வரவழைத்தோம்.

சென்னையில் இரண்டு நாட்கள் தங்கி 12 மணி நேரம் உழைத்து எங்களுக்குத் தேவையான தோற்றத்தை உருவாக்கி கொடுத்தார்கள். அதர்வாவின் கண்கள், மூக்கு தவிர அவரின் வாய் உட்பட எல்லா உறுப்புகளையும் அளவெடுத்தனர். அத்துடன் ஒரு மாஸ்க் பூச்சை அதர்வாவின் மீது பூசி விடுவார்கள். அதர்வா ஐந்து மணி நேரம் சிலை போல அசையாமல் இருக்க வேண்டும். அவரும் இருந்தார். அந்த நிலையில் மூச்சு விடுவது மிகவும் சி ரமம் என்பதால் மூச்சு விடுவதற்கு ஒரு சிறு குழாயை அவர் மூக்கில் பொருத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து ‘ப்ரோஸ்தடிக் கேஸ்ட்’ செய்ய அவர்களுக்கு ஒரு மாதம் தேவைப்படுவதால், அதன் பிறகுதான் தொடர் படப்பிடிப்புக்கு செல்ல முடியும். இதற்கு முழுமையாக ஒத்துழைத்த அதர்வா, ‘இது போன்ற முயற்சிகளை முதன் முறையாக செய்வதால் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்’ என்றார்.

ஆக்‌ஷன் திரில்லரான ‘பூமராங்’ படத்தில் மேகா ஆகாஷ், ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி மணிரத்னம், உபென் படேல் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவில், ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ‘ரதன்’ இசையமைக்கிறார். படத்தை இயக்குவதோடு மசாலா பிக்ஸ் சார்பில் படத்தை தயாரிக்கிறார் ஆர் கண்ணன்.