பூனைக்குட்டியை ஆசை ஆசையாக ஆர்டர் செய்த தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி! அதில் வந்தது என்ன தெரியுமா?

செய்திகள்

பிரான்ஸ் நாட்டின் தம்பதியினர் பூனையை வளர்க்க ஆசைப்பட்டு புலியை வளர்த்து வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியினருக்கு பூனை வளர்ப்பதில் பெரிதும் ஆர்வம் இருந்துள்ளது. இந்த நிலையில் ஆப்பிரிக்கா நாட்டின் மிகவும் பிரபலமான சாவான வகை.பூனையை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர் இதற்கான பணமான 6 ஆயிரம் யூரோக்களை ஆன்லைனிலே செலுத்தியுள்ளனர்.

அவர்கள் ஆர்டர் செய்த சாவான வகை பூனை இவர்களது வீட்டிற்கு வந்தது, அந்த தம்பதியினரும் தங்களது நேரத்தை செலவிட்டனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல பூனையின் நடவடிக்கையில் மற்றம் இருப்பதை கண்டனர்.


உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸாருடன் விலங்கியல் நிபுணர்கள் மேற்கொண்ட சோதனையில் அது பூனைக் குட்டியல்ல சுமத்ரன் வகை புலிக்குட்டி என தெரிவித்தனர்.இதனிடையே அவர்களிடம் இருந்து புலிக்குட்டியை மீட்டு வன உயிரியல் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டது.