பூஜை அறையில் வைக்கும் தண்ணீரை வீணாக்காதீர்கள்! ஏன் தெரியுமா? இப்படி செய்தால் அதிசயம் நடக்கும்..!

ஆன்மிகம்
நம் வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து கடவுளை வழிப்படுவது வழக்கமான ஒன்று. நம் வீட்டில் பூஜை அறையில் குல தெய்வத்தையும், இஷ்ட தேவதைகளையும் வணங்கினால் நம் வீட்டில் பிரச்சனைகள் இருந்தால் அவை தீரும்.
வீட்டில் பூஜை செய்யும் போது நெய் வேதியம் நாம் சமைக்கும் ஏதாவது ஒரு பொருளை வைத்து படைக்க வேண்டும். இந்த பொருளை வைத்து படைக்க முடியாதவர்கள் கற்கண்டு, உலர் திராட்சை மற்றும் பேரீட்சைப்பழம் இவைகளை வைத்து நெய் வேதியம் செய்து இறைவனுக்கு படைக்கலாம்.
அதுமட்டுமின்றி நம் வீட்டில் இருக்கும் நெய் வேதிய பஞ்சபாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நிரப்பி வைத்து உங்களின் வேண்டுதல்களை வேண்டிக்கொண்டால் நீங்கள் வேண்டும் வேண்டுதல்கள் விரைவில் பஞ்சபாத்திரத்தின் மூலம் நீரில் இறங்கும் என சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
நம் விட்டில் இந்த பூஜையை முடித்த பிறகு பஞ்சபாத்திரத்தில் உள்ள புனிதமிக்க இந்த தண்ணீரை வீட்டில் இருக்கும் அனைவரும் தீர்த்தமாக குடித்தால் மிகவும் நல்லது.
அதுமட்டுமின்றி நம்மில் பல பேர் அந்த நீரை துளசி மாடத்திற்கும், செடிகலுக்கும் ஊற்றுவார்கள். அந்த நீரை நாம் தீர்த்தமாக குடிக்கும் போது தான் நீங்கள் வேண்டிக்கொண்ட வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். நாம் வீட்டை விட்டு சுபகாரியங்களுக்காக வெளியே செல்லும் போது பூஜை அறையில் இருக்கும் இந்த நீரை குடித்து சென்றால் நாம் நினைத்த காரியம் மற்றும் நம் வாழ்க்கை மிகவும் வெற்றிகரமாக மகிழ்ச்சியாகவும் இருக்கும்.