பீட்டர் பால் திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி… வனிதாவின் உருக்கமான பதிவு..!!

செய்திகள்

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் செய்த பீட்டர் பால் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதனால் வனிதா ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் சமீப நாட்களாக இணையத்தளங்களில் பெரும் விவாத பிரச்சினையாக உருவெடுத்து இருந்தது.

இந்நிலையில், பீட்டர் பாலுக்குஉடைந்து போன வனிதா கணவர் பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் வனிதா மொத்தமாக உடைந்து போயுள்ளார்.

இதனால், வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்றைய தினத்தை தன்னால் மறக்கவே முடியாது என்றும், கடவுள் தங்களுக்கு ஏதோ ஒரு காரணத்திற்காகவே இந்த சோதனை கொடுத்துள்ளார் என்றும், நிச்சயம் மிராக்கல் நடக்கும், நான் கடவுளை நம்புகிறேன்.

எங்களின் காதலின் வலிமை எங்களை கை விடாது. அவருக்காக நானும், எனக்காக அவரும் எப்போதும் இருப்போம் என கூறியுள்ளார்.

மேலும், திருமணம் என்பது சட்ட ரீதியான ஒரு அங்கீகாரமோ ஒரு அச்சிடப்பட்ட காகிதமோ அல்ல, அது ஒரு உணர்வு பூர்வமானது.

உனக்கு நான், எனக்கு நீ என ஆன்மாக்கள் ஒன்றிணையும் சங்கமம். சிலருக்கு வேண்டுமானால், திருமணமும், விவாகரத்தும் வெறும் பேப்பராக இருக்கலாம் என ட்விட்டர் பக்கத்தில் ஒரே அடியாக புலம்பி தள்ளி வருகிறார்.

இதையடுத்து, தனது கணவர் பீட்டர் பால், குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்யும் ரசிகர்களுக்கும், அவரது உடல் நலனிலும், எங்கள் வாழ்க்கை நலனிலும் அக்கறை காட்டும் அன்பு உள்ளங்களுக்கு எப்போதுமே நான் நன்றி கடன் பட்டவள் என்றும், லைஃப் இஸ் வெரி ஷார்ட் என்றும் மிகவும் உருக்கமாக பல பதிவுகளை வனிதா பதிவிட்டு வருகிறார்.