பிரபல முன்னணி நடிகரின் மகனுக்கு ஜோடியாக நடிக்கும் ஷாலினி பாண்டே! அட இவருக்கு ஜோடியா என ஆ ச்சரியத்தில் ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படம் நடிக்கா விட்டாலும் ரசிகர்களிடம் ஒரே ஒரு படத்தின் மூலம் பிரபலமானவர் தான் ஷாலினி பாண்டே. தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் ஓவர் நைட்டில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

அதுவும் இப்படத்துக்கு பிறகு இவருக்கு அனைத்து மொழிகளிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஷாலினி பாண்டே பாலிவுட்டில் மட்டும் நடிக்க சம்மதித்து மேரி நிமோ என்ற படத்தில் நடித்தார்.

மேலும் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் சற்று சரிவை சந்தித்தது. அதன் காரணமாக அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பிறகு இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே வந்தன.

சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் 100 % காதல் என்ற படத்தில்  ஜிவி பிரகாஷுக்கு  ஜோடியாக நடித்தார். இப்படம் தமிழில் பெரிய அளவில் வெற்றி கிடைக்காததால் அடுத்தடுத்து இவருக்கு தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பும் வராமல் தடுமாறினார்.

அதனால் ஷாலினி பாண்டே இனிமேல் கதைக்கு முக்கியத்துவமுள்ள படத்தில் மட்டும் நடிக்க முடிவெடுத்துள்ளார். அதன் காரணமாக தற்போது ஒரு சில பட வாய்ப்புகள் வந்துள்ளதாகவும் அதில் சில படங்களை மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பாலிவுட்டின் பிரபல நடிகரான அமீர்கான் மகனுக்கு ஒரு படத்தில் ஜோடியாக  நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் டெக்னீசியன் தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவும் ஷாலினி பாண்டேக்கு வாய்ப்புள்ளது எனவும் அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருப்பார்கள் கூறி வருகின்றனர்.