பிரபல நடிகை 26 வருடங்களுக்கு பின் மீண்டும் சினிமா துறையில் காலெடுத்து வைக்கிறார்.. அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..!!

வைரல் வீடீயோஸ்

சினிமா துறையில் எத்தனையோ நடிகைகள் இருக்கிறார்கள். சிலர் மட்டும் பிரபல ஹீரோயின்களாக ஜொலித்தார்கள். ஆனால் படங்களில் ரொமான்ஸ் டூயட் பாடல்களில் ஆடுவதற்கென்றே சில நடிகைகள், இரண்டாம் ஹீரோயின்கள் இருப்பார்கள்.

அது போல தான் பல படங்களில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய காந்த், பார்த்திபன், சத்யராஜ், ராம ராஜன் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, நடனம், ரொமான்ஸ் என அசத்தியவர் நடிகை ரூபினி. இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல்  மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என நடித்து வந்த இவர் 1995 க்கும் பின் எந்த  படங்களிலும் நடிக்கவில்லை.

தமிழில் கடைசியாக அவர் நடித்த படம் தாமரை. இவர் 26 வருடங்களாக சினிமாவை விட்டு விலகியிருந்தவர் ராதிகா நடித்து தயாரிக்கும் சித்தி 2 சீரியலில் பத்மா சண்முகப்பிரியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ஒரு மைனா மைனா குருவி என்ற உழைப்பாளி படத்தில் ரஜினியுடன் டூயட் ஆடியிருப்பார்.

மலையாளத்தில் மோகன் லால், மம்முட்டி, தெலுங்கில் வெங்கடேஷ், பாலகிருஷ்ணா என பலருடன் நடித்திருந்தார்.