பிரபல நடிகை 21 வயதில் தன்னை விட 12 வயது அதிகம் உள்ளவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.. பல ஆண்டுகளுக்கு பின் குழந்தையை பெற்றெடுத்த நடிகை யார் தெரியுமா?

வைரல் வீடீயோஸ்

தொலைக்காட்சி தொடர்கள் பலர் சினிமாவில் ஜொலித்து வருவதுண்டு. அந்த வரிசையில் கடந்த 20 ஆண்டுகளாக சின்னத்திரை, வெள்ளித்திரை என தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை நீலிமா ராணி ஆரம்ப காலத்தில் பெரியளவில் பேசப்படாமல் இருந்தாலும் தற்போது அவர் நடத்தி வரும் போட்டோஹுட் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் இவருக்கும் இவரது கணவருக்கும் 12 வயது வித்தியாசமாம். இது ரசிகர்களுக்கு சற்று அ திர்ச்சியாக இருந்தாலும். இவர்களது திருமணம் முழுக்க முழுக்க காதல் திருமணமாம். அவரது கணவர் ஒரு தமிழர் இவர் தெலுங்கு.

21 வயதில் அவரை காதலித்து முதல் முதலில் இவர் தான் அவர் கணவரிடம் லவ் ப்ரொபோஸ் பண்ணினாராம். ஆனால் இந்த நாள் வரைக்கும் இருவருக்கும் காதல் கொஞ்சம் கூட குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்றும் ச ந்தோசமாக இந்த திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்கள்.

இவர்களது திருமணம் மட்டுமல்ல அவர்களது குழந்தை கூட அவரது விருப்பத்தின் படி தான் பிறந்திருக்கிறது. திருமணம் முடிந்து எட்டு மாதத்தில் இவரது தந்தை இ றந்து விட்டதால் இவரது தம்பி அப்பதான் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

அதனால் என் தம்பி காலேஜ் எல்லாம் படித்து முடித்து விட்டு பிறகு தான் நமக்கு குழந்தை என்று கணவரிடம் கூறியிருக்கிறார். அவரது கணவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அதன் படி அவரது தம்பி கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் ஒன்பது வருடம் கழித்து இவர் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அதுவும் பெண் குழந்தை பிறந்ததால் தேவதையே பிறந்ததாக எண்ணி கொண்டாடியுள்ளனர். அந்த பெண் குழந்தை எங்கள் காதலின் அடையாளம் மற்றும் எங்கள் முழு சந்தோஷமும் என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் நீலிமா ராணி.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூட திருமணத்திற்கு முன் இளைஞர் ஒருவர் லவ் லட்டர் கொடுத்த சம்பவத்தை கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Neelima Esai (@neelimaesai)