பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை ஜோடியாக்க துடிக்கும் முன்னணி நடிகர்! யார் அந்த நடிகர்.. அடுத்து உருவாகும் பிரமாண்ட படம்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் இருந்து ஹிந்தி சினிமா சென்று இந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. ம றைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.

பாலிவுட் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் ஒரு நல்ல படம் கிடைத்தால் நடிக்க தயார் என தொடர்ந்து தூது விட்டுக் கொண்டிருக்கிறார். அம்மாவை போல இந்தியா முழுவதும் பிரபலமான நாயகியாக வர ஆசையாம்.

இதை அறிந்த முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் தன்னுடைய அடுத்த படத்தில் ஸ்ரீதேவி மகளை ஜோடியாக போடலாம் என தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிவுரை கூறியுள்ளார். அப்போ தான் படம் பாலிவுட்டிலும் பட்டையை கிளப்பும் என்கிறாராம்.

ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார் என்பதை அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவித்து விட்டனர். ஆனால் படப்பிடிப்பு எப்போது என்பது தற்போது வரை முடிவு செய்யவில்லை.

பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

பிரசாந்த் நீல் என்பவருக்கு தற்போது தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதை குறிப்பிட வேண்டியிருக்கிறது. கேஜிஎஃப் படங்களுக்கு பிறகு இவரது படத்தில் நடிக்க பல நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.