பிரபல நடிகையான ஷாலு ஷம்மு தன்னுடைய ரசிகர்களின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஷாலு ஷம்மு.
சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி வருவார்.
இந்நிலையில் அவர் ரசிகர்களுக்காக செய்த செயலொன்று பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
அதாவது, தனது ரசிகர்கள் இரவரது பிறந்தநாளை கொண்டாடி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.
தன்னுடைய வீட்டுக்கே அவர்களை வரவழைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இவர் தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.