தென்னிந்திய பல முன்னணி நடிகைகள் முப்பதை கடந்தும் இன்றளவும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். காரணம் திருமணத்திற்கு பிறகு இவர்களால் சினிமாவில் தொடர்ந்து கதாநாயகியாக தொடர முடியாது என்பதாலும் அவர்களது மவுசு ரசிகர்கள் மற்றும் திரையுலகில் குறைந்து விடும்.
என்பதாலும் அவர்கள் திருமண வயதை கடந்த நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளனர். இந்நிலையில் பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கதாநாயகியாக நடித்து தான் வருகிறார்கள்.
இருப்பினும் அவர்களுக்கு திருமணத்திற்கு முன்னர் வந்த பட வாய்ப்புகளும் பிரபலமும் சரிவர கிடைக்கபடுவதில்லை. இந்நிலையில் தான் இவர்கள் வயதை கடந்த போதிலும் திருமணத்தை தவிர்த்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில் சமீபத்தில் பல நடிகைகள் தொடர்ந்து திருமணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகையான காஜல் அகர்வால் ,நஸ்ரியா, ப்ரியாமணி போன்ற பல முன்னணி நடிகைகள் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள்.
இவர்களின் வரிசையில் பிரபல முன்னணி நடிகையான த்ரிஷாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. 90-களின் காலகட்டத்தில் இருந்து இன்று வரை ரசிகர்களின் கனவு கன்னியாகவும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் த்ரிஷா.
இவர் தென்னிந்திய சினிமாவில் நடித்திராத பிரபல முன்னணி நடிகர்களே இல்லை எனலாம்.அந்த அளவிற்கு ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
]
மேலும் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார் த்ரிஷா. இருப்பினும் முப்பதை கடந்த நிலையிலும் இன்றளவு வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்ந்து வருகிறார்.
இப்படி இருக்கையில் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய த்ரிஷாவிற்கு அவரது நெருங்கிய தோழியும் பிரபல நடிகையுமான சார்மி பிறந்த நாள் வாழ்த்து கூறியதோடு த்ரிஷா தனித்து கொண்டாடும் பிறந்த நாள் இதுவே ஆகும் என கூறியதன் மூலம் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க போகிறது என்ற தகவலையும் பகிர்ந்து உள்ளார்.
பல வருடங்களாக திரையுலகில் கதாநாயகியாக கலக்கி வந்த த்ரிஷா திருமணம் நடக்க போகிறது என்ற தகவல் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பலத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.