ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகை கரீனா கபூர். டாப் ஸ்டார் ஹீரோயினான இவர் அதிக சம்பளம் பெறும் நடிகைகளிலும் ஒருவர். பல ஹீரோக்களுடன் நடித்த தனக்கென ஒரு சினி மார்க்கெட்டையும், ரசிகர்கள் வட்டாரத்தையும் வைத்துள்ளார்.
அவரை சுற்று சர்ச்சைகளும், அவ்வப்போது பொது இடங்களுக்கு புகைப்படமாக வைரலாவதையும் தொடர்ந்து காண முடிகிறது.
நடிகரும் சினிமா தயாரிப்பாளருமான சயீப் அலி கானை அவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே தைமூர் என்ற ஆண்குழந்தை இருக்கிறது. தற்போது இரண்டாம் குழந்தைக்கு கர்ப்பமாகியுள்ளார் கரீனா.
தன் வீட்டிற்கே அழகுக்கலை நிபுணர்களை வரவைத்து சிகை அலங்காரம் செய்யும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.