தமிழ் சினிமாவில் குறைவான வயது கொண்ட நடிகைகள் தன்னைவிட அதிக வயதான நடிகருடன் ஜோடி சேர்ந்து ரொமான்ஸ் செய்யும் படங்கள் அதிகரித்து விட்டது. அந்த வகையில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக ஆரம்பித்து பின் சீரியல் நடிகையாக களமிரங்கி பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
இவர் இதையடுத்து மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து இந்தியன் 2 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.
இந்நிலையில், இயக்குநர் ருத்ரன் இயக்கும் படத்தில் ராகவா லாரண்ஸிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். மேலும் பிரபுதேவாவிற்கு ஜோடியாகவும் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளாராம்.
இப்படி தன்னைவிட கிட்டத்தட்ட 15 வயது மூத்த நடன இயக்குநர்களுடன் நடிக்கவுள்ளார் பிரியா பவானி சங்கர். இதை கேள்விபட்ட ரசிகர்கள் பணத்திற்காக இப்படியுமா என்று கலாய்த்து வருகிறார்கள்.
Happy Birthday @priya_Bshankar
All the best for all your projects including Rudhran. Happy to welcome you on board! pic.twitter.com/xmkMJ7LlTC— Raghava Lawrence (@offl_Lawrence) December 31, 2020