நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன் கிரிக்கெட்டில் மும்முரமாக கவனம் செலுத்தி வந்தார்.
இவர் 2010ம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார், பின் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட 2018ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
இந்த நிலையில் கட்டா ஜ்வாலா என்பவரை காதலித்து வந்தார் விஷ்ணு. அவரது பிறந்தநாள் அன்று இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
தற்போது மறுமணம் செய்துகொள்ள போகும் தனது காதலியுடன் கட்டிப்பிடித்த படி விஷ்ணு உள்ள ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.