பிரபல நடிகர் தல அஜித்துடன் மீண்டும் நடிக்க விரும்பும் முன்னணி நடிகை யார் தெரியுமா? ரசிகர்கள் மகிழ்ச்சியில்..!!

செய்திகள்

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகராக திகழ்பவர், இவருக்கென்று தமிழில் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது.

அதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார்.கொரோனா காரணத்தினால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும், வலிமை படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பிரபல முன்னணி நடிகையாக திகழும் நடிகை அனுஷ்கா ஒரு பேட்டியில் “நான் கண்டிப்பாக அஜித் சார் உடன் மீண்டும் இணைந்து நடிப்பேன்” என கூறியுள்ளார்.

மேலும் இதற்கு முன் நடிகை அனுஷ்கா தல அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.