தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட சீரியல்கள் மீண்டும் தொடங்கியதால் படப்பிடிப்புகள் எடுத்து வருகின்றன.
கொரோனாவால் சீரியல் பல பாதியில் நிறுத்தப்பட்டது. நான்கு மாதங்களுக்கு மேல் இடைவெளி விட்டதால் மக்கள் மத்தியில் எந்த வரவேற்பும் இல்லை.மேலும் டிவி சேனல்கள் புதிய சீரியல்களை இயக்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
மேலும் சீரியல்களில் முன்னணியில் இருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூர்யவம்சம் என புதிய சீரியல் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் நடிகர் மற்றும் இயக்குனருமான பாக்யராஜின் மனைவி பூர்ணிமா முக்கிய வேடத்தில் இந்த நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி இந்த சீரியலில் நடிக்க ராஜேஷ், நிகிதா, சாதனா ஆகியோரும் நடித்து வருகின்றன.
மேலும் இந்த சீரியல் பல விதமான கலாச்சாரத்தை கொண்டு குடும்ப கதையாக எடுக்கப்பட்டு வருகிறது.