பிரபல நடிகரின் படத்தில் நடிக்கும் வனிதா விஜயகுமார்! இந்த படத்தில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக வனிதா நடிக்கிறாரா? முன்னணி நடிகர் யார் தெரியுமா?

செய்திகள்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து மீண்டும் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். அதனை தொடர்ந்து இவர் சன் டிவியின் முக்கிய தொடரான சந்திரலேகா சீரியலில் கெஸ்ட் ரோலில் வந்து அசத்தியிருந்தார்.

வனிதா விஜயகுமார். மேலும் தற்போது யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது அவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் ஹரி நாடாருக்கு ஜோடியாக ‘2K அழகானது ஒரு காதல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வனிதா விஜயகுமார். மேலும் பிரஷாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் போ லீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிப்பதாக வனிதா விஜயகுமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.