பிரபல தொகுப்பாளினி திருமணமான நடிகருடன் உல்லாச சுற்றுலா! அவரது செல்ஃபியால் சி க்கிய தொகுப்பாளினி..! யார் அந்த தொகுப்பாளினி தெரியுமா? இதோ..!!

செய்திகள்

இந்த சமூகவலைத்தளங்கள் என்பது கடல் போன்றது நீந்த தெரிந்தவர்கள் நீந்தலாம், மீன் பிடிக்க தெரிந்தவர்கள் மீன் பிடிக்கலாம். முத்து குளிக்க தெரிந்தவர்கள் முத்தும் எடுக்கலாம். ஆனால், எதுவுமே தெரியாமல் வந்தால் ஆளை சுருட்டி உள்ளே இழுத்து சுறாக்களுக்கு இரையாக்கி விடும் இந்த சமூக வலைத்தளங்கள். இதற்கு எடுத்துக்காட்டாக பல சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம்.

இணையத்தில் சிக்கி சின்னா பின்னமானவர்களையும் பார்த்துள்ளோம். மேலும், லட்சம், கோடி என சம்பாதிக்கும் நபர்களையும் பார்த்து வருகிறோம். ஆனால், இங்கே நீச்சல் தெரிந்தும் நீந்த முடியாமல் சிக்கிய இளம் நடிகரை பற்றி தான் பார்க்க போகிறோம்.

இவர் கடந்த வருடம் தான் திருமணம் செய்து கொண்டவர் என்பது கூடுதல் தகவல். என்னதான் திருமணம் ஆனாலும் தன்னுடைய பழைய லவ்தீக வாழ்கையில் இருந்து வெளியே வர முடியாமல் தற்போது கையும் களவுமாக சிக்கிக்கொண்டார். ஆனால், இந்த மேட்டரை அவரது மனைவி கண்டுபிடித்த விஷயம் தான் டிடெக்டிவ் ரேஞ்சுக்கு இருக்கின்றது. சமீப காலமாக சின்னத்திரை வட்டாரத்தில் இது போன்ற கள்ள காதல் விவகாரங்கள் அதிக அளவில் அடிபடுகின்றது.

அந்த லிஸ்டில் தன்னை தானே வம்படியாக வந்து இணைத்துக்கொண்டிருக்கிறார் இந்த பேய்த்தனமான நடிகர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் கோவா சென்று வருவதாக சொல்லி விட்டு கிளம்பியுள்ளார் நடிகர். இதனை நம்பி அனுப்பி வைத்துள்ளார் அவரது மனைவி. இந்நிலையில், கணவருக்கும் அந்த திருமணம் ஆகாத தொகுப்பாளினிக்கும் இருக்கும் தொடர்பு குறித்து சில தகவல்கள் வந்துள்ளது.

இது குறித்து, கணவரிடம் எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்து இந்த விஷயத்தை உறுதி செய்ய நினைத்து சில வேலைகளை செய்துள்ளார். முதல் வேலையாக அந்த தொகுப்பாளினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர முடிவு செய்து தேடிய போது இவரது இன்ஸ்டா முகவரியை முன்னரே ப்ளாக் செய்து வைத்துள்ளார் அந்த தொகுப்பாளினி என்பது தெரிய வந்துள்ளது.

இதனால், சந்தேகம் அதிகரிக்கவே வேறொரு இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து அவரை பின் தொடர செய்துள்ளார். இந்த முதல் முயற்சியே அவருக்கு சந்தேகத்தை பூர்த்தி செய்து வைத்து விட்டது. போக்கிரி படத்தில் வரும் பாடி சோடா கணக்காக மண்டை மேல் இருந்த கொண்டையை மறந்து விட்டார் அந்த நடிகர். ஆம், அவர் வீட்டை விட்டு சென்ற மறு நாள் தொகுப்பாளினி கொடைக்கானலில் இருந்து ஒரு புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார்.

அவர்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியே நின்றபடி ஒரு செல்ஃபி புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார் தொகுப்பாளினி. அதில், அந்த நடிகரின் செருப்பு தெரிவதை கவனிக்காமல் அப்படியே அப்லோட் செய்து விட்டார்.

இதனை பார்த்த நடிகரின் மனைவிக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது. அப்போதும், அதனை நம்பாமல் அவருடைய நம்பருக்கு போன் செய்துள்ளார். நாட் ரீச்ச்சபில் குரல் தமிழிலேயே ஒலித்துள்ளது.

ஏதாவது டெக்னிக்கல் குறைபாடு இருக்கலாம் என்று விட்டு விட்டார். ஆனால், அடுத்த நாள் அந்த நடிகை அப்லோட் செய்த புகைப்படத்தில் அந்த நடிகரின் கார் தெரிவதை கவனிக்காமல் ஒரு சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அம்புட்டு தான் நடிகரை தொடர்பு கொள்வதற்கு பதிலாக அந்த தொகுப்பாளினியை தொடர்பு கொண்டு கிழி கிழி என கிழித்துள்ளார். தோழி என்று வீடு வரை விட்டதற்கு நல்ல பரிசு கொடுதுருக்க என ஏகத்துக்கும் டோஸ் விட்டுள்ளார்.

அவ்வளவு தான் அடுத்த பத்தாவது மணி நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளார் நடிகர். இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் புகைச்சலை கிளப்பி விட்டுள்ளது.