தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு எந்த அளவிற்கு ஒரு நல்ல பெயர் உள்ளதோ அது போலவே சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கும் ஒரு நல்ல பெயர் உள்ளது. அந்த வகையில் சீரியல் நடிகராக பல தொலைக்காட்சிகளில் கலக்கி வந்தவர் தீபக்.
ஆம் கெட்டி மேளம், நிலா, மற்றும் தென்றல் உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரை ஒரு நடிகராக பலருக்கும் தெரிந்ததை விட, ஒரு கலகலப்பான தொகுப்பாளராக பலருக்கும் தெரியும். விஜய் டிவியின் மூலம் பிரபலமாகி அதன் பின் தற்போது ஜீ தமிழில் பணிபுரிந்து வருகிறார்.
தொகுப்பாளர் தீபக் 2008ஆம் ஆண்டு சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு ஒரு அழகிய மகனும் இருக்கிறார். இந்நிலையில் தொகுப்பாளர் தீபக்கின் மனைவி மற்றும் மகன் மூவரும் இணைந்திருக்கும் அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்ளோ அழகான மனைவியா என வாயைப்பிளந்துள்ளனர்.