பிரபல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு நிச்சயதார்த்தம்… புகைப்படங்கள் இதோ…!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் நடனம் ஆடுபவராகவும், நடிகையாகவும் வலம் வந்தவர் ஸ்வேதா. கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

அதன் பிறகு கார்த்திகை பெண்கள், அழகி போன்ற சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.

தற்போது இவர் இந்த கொரோனா காலத்தில் ஒரு சந்தோஷ விஷயத்தை ஷேர் செய்துள்ளார்.

அதாவது இவருக்கு ஜுலை 9ம் தேதி 2020 அருண் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாம். அவரே இந்த தகவலை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

அதோடு அவரது ஹல்தி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகுகிறது.

இந்நிகழ்ச்சி சில தொலைக்காட்சி நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர்.