பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினிக்கு அழகான குழந்தை பிறந்தது… என்ன குழந்தை தெரியுமா?

செய்திகள்

பிரபல நடிகை மைனா நந்தினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மைனா நந்தினிக்கும், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் யோக்ஸவரனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக நந்தினி லாக்டவுன் நேரத்தில் தெரிவித்தார். அதன் பிறகு அவருக்கு அண்மையில் வளைகாப்பு நடந்தது.

வளைகாப்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நந்தினி சமூக வலைதளத்தில் வெளியிட்டார். திருமணம், கர்ப்பம், குழந்தை பிறந்த பிறகு போட்டோஷூட் நடத்துவது தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மைனா நந்தினி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த தகவலை அவரின் கணவர் யோகேஸ்வரன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

நந்தினிக்கு குழந்தை பிறந்த தகவல் அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.