பிரபல ஓவியரும், (அதிமுகவின் கொடியை வடிவமைத்தவரும்) நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவால் சற்றுமுன் ம ரணம்… சோ கத்தில் மூழ்கிய திரையுலகம்..!

செய்திகள்

பிரபல நகைச்சுவை நடிகரும், குணச்சித்திர நடிகருமான பாண்டு(வயது74) கொரோனாவால் இன்று அதிகாலை உயிரி ழந்தார்.கொரோனா பா திப்பின் காரணமாக பாண்டுவும், அவரது மனைவி குமுதாவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பாண்டு உயிரி ழந்தார். அவரது மனைவி குமுதா தீவிர சிகிச்சைப்பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

1970ம் ஆண்டில் மாணவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பாண்டு, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.நடிகர் விவேக், இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, தயாரிப்பாளர் பாபுராஜா, பாடகர் கோமகன், நடிகர் பாண்டு என்று திரையுலகினர் தொடர்ந்து கொரோனாவால் உயிரி ழப்பது ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது.

அடிப்படையில் ஓவியரான பாண்டு, ’கேப்பிடல் லெட்டர்ஸ்’நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார் பாண்டு. திரையுலக பிரபலங்களில் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகள் அழகுற பாண்டு காரணமாக இருந்தார். அதிமுகவின் கொடியை வடிவமைத்துக் கொடுத்தவர் பாண்டு.

மாணவன், கரையெல்லாம் செண்பகப்பூ, என்னுயிர் கண்ணம்மா, பணக்காரன், பாட்டுக்கு நான் அடிமை, நடிகன், சின்னத்தம்பி , ரிக்ஷா மாமா, திருமதி பழனிச்சாமி, வால்டர் வெற்றிவேல், சிந்துநதிப் பூ, நாட்டாமை, அசுரன், முத்து ,உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை , வாலி, பூமகள் ஊர்வலம், ஷாஜகான், சமுத்திரம், வில்லு என்று நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாண்டுவின் சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ். இவரும் சிறந்த நகைச்சுவை நடிகர் ஆவார்.

நகைச்சுவை நடிகர் பாண்டு என்றாலே, அவரின் விசித்திரமான உச்சரிப்பும், வாயசைவும் தான் நினைவுக்கு வரும். அ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவரும், இரட்டை இலைச் சின்னத்தை வரைந்து கொடுத்தவரும் இவர்தான். இது இந்தத் தலைமுறையினருக்குத் தெரியுமா என்பது சந்தேகமே.

தனது அனுபவங்களைப் பற்றி அவர் நினைவு கூர்ந்ததாவது:
அ.தி.மு.க. தொடங்கப்பட்ட 1972-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு அழைத்த எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி இருக்கிறேன் தெரியுமா… என்றார். தெரியும் பத்திரிகையில் பார்த்தேன் என்றேன் நான். கட்சிக்கு பேர் என்ன எனக் கேட்டார். அ.தி.மு.க. என்றேன். கட்சிக்கான கொடியை நீங்கள்தான் வரைய வேண்டும். இன்றிரவே இங்கேயே தங்கி வரைய வேண்டும் என்றார். அங்கே இருந்த அறைக்குள் என்னை அனுப்பிவிட்டு, வெளியில் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டனர்.

அதிமுக ஆரம்பிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை அப்போது தமிழகத்தில் இருந்தது. எம்.ஜி.ஆரின் வீடு இருந்த இடத்தை திரைப்பட சண்டைக் கலைஞர்கள்தான் காவல் காத்தனர்.

அப்போது தான் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்து முடித்திருந்தேன். எனது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ், எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் மூலமாக என்னைப் பற்றி தெரிந்து கொண்டே என்னை அழைத்திருந்தார் எம்ஜிஆர்.இரவு 10 மணிக்கு அறைக்குள் சென்ற நான் 10.30-க்குள் கருப்பு- சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா சிரிப்பது போல ஒரு கொடியை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர் தொண்டர்களை உசுப்பிவிடுவது போல இந்தக் கொடி இல்லையே. சிரிப்பில் போர்க்குணம் இருக்காது. கட்சியின் போர்க் குணத்தை வெளிக்காட்டும் விதத்தில் கொடியை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார்.

அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலையை மனதில் வைத்து, அவர் கை நீட்டிப் பேசுவது போல கொடிக்கான படத்தை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த அவர் இந்தப் படத்தைக் கொடியாக மாற்றும்போது கை வெட்டுப்பட்டுவிடும் என்றார். கையைச் சுருக்கி நேராக இருப்பது போல வரைந்து கொடுத்தேன். அது பார்ப்பதற்கு, அண்ணாவின் கையில் துப்பாக்கி இருப்பது போல இருந்தது. அதைப் பார்த்தவர். ஏன் எம்.ஆர்.ராதா என்னை சுட்டது போதாதா என்றார். உடனே கையை சிறிது மேலே இருப்பது போன்ற இப்போதைய கொடியை வரைந்து கொடுத்தேன். கட்டித் தழுவி, மிகவும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டார்.

அதேபோல, இரட்டை இலைச் சின்னத்தையும் நான்தான் வரைந்து கொடுத்தேன். அ.தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்தி, 5 பவுன் தங்கச் சங்கிலியும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் கொடுத்தார் எம்ஜிஆர்.தமிழகம் முழுவதும் நான் வடிவமைத்த கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்க்கும் வேளைகளில் எல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஒரு கலைஞனுக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்றார் அவர்.

நன்றி-தினமணி.