பிக்பாஸ் வீட்டில் மீண்டும் வனிதா! தீபாவளி கொண்டாட்டமாக சர்ப்ரைஸ் கொடுத்த நட்சத்திரங்கள்.. வெளியான ப்ரோமோ இதோ..!!

வைரல் வீடீயோஸ்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது, நாள்தோறும் ஒளிபரப்பாகும் எபிசொட்கள் குறித்து ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் சென்ற வாரம் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டைவிட்டு சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்ற பட்டார்.

மேலும் இந்த வாரம் தீபாவளி என்பதால் பிக்பாஸ் வீட்டை விட்டு யாரும் வெளியேற்ற படவில்லை, இதனால் போட்டியாளர்கள் ஜாலியாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், தீபாவளி கொண்டாட்டமாக முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் டிவி-யில் வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.