பிக்பாஸ் லாஸ்லியா நடிகையான பின் சேர்த்த சொத்து எவ்வளவு தெரியுமா?? வெறும் மூன்று படங்களில் இவ்வளவு சம்பளமா??

செய்திகள்

பிக்பாஸ் சீசன் 3 மூலம், ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா. முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன்பின் பிக்பாஸில் போட்டியாளராக களமிறங்கி, தற்போது தமிழ் சினிமாவின் இளம் நடிகையாகி விட்டார் லாஸ்லியா.

 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க இரண்டு படங்களின் வாய்ப்புகள் இவர் தேடி வந்தது. ஆம் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடிக்கும் Friendship படத்திலும்.

நடிகர் ஆரி, நடிகை ஸ்ருஷ்டி நடிக்கும் படத்திலும் இரண்டாம் கதாநாயகியாக என இரு படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட 60% சதவீதம் முடிந்து விட்ட நிலையில் மேலும் ஒரு பட வாய்ப்பு இவரை வந்தடைந்தது.

ஆம் நடிகை லாஸ்லியா இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் முதலில் கமிட்டன இரு படங்களுக்கும் நடிகை லாஸ்லியா வாங்கிய சம்பளம் மட்டும் கிட்டத்தட்ட 25 லட்சம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நடிகையான பின் பிக்பாஸ் லாஸ்லியா சுமார் ரூ. 50 லட்சம் வரை சொத்து சேர்த்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இவை அதிகாரப்பூர்வ தகவல் கிடையாது என்றல்லாம் பல தரப்பில் இருந்து கூறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இவருக்கு பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த புகழ் தான், தமிழ் திரையுலகில் அறிமுகமவிற்கும் படங்களிலேயே இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறுகின்றனர்.