பிக்பாஸ் முகன் ராவ் ஹீரோவாக நடிக்க போகிறார்… கதாநாயகி இவரா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

செய்திகள்

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 சீசன் மூலம் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மூகன் ராவ்.

அந்த சீசனின் டைட்டிலை கூட முகன் ராவ் தான் தட்டி சென்றார். இவர் எப்போது ஹீரோவாக நடிப்பார் என இவரின் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் இவர் நடிக்க இருக்கும் முதல் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை பெண் இயக்குனர் அஞ்சனா அலிகான் என்பவர் இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவர் இதற்கு முன்பு நானி, நித்யாமேனன் இணைந்து நடித்த வெளியான வெப்பம் எனும் படத்தை இயக்கி உள்ளார்.

இவர் அடுத்ததாக இருக்க இருக்கும் இப்படத்தில் பிக் பாஸ் முகினுக்கு ஜோடியாக திவ்யா பாரதி அல்லது சீரியல் நடிகையான சிவானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும் இப்படத்தை குறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.