பிக்பாஸ் நடிகை வனிதா மற்றும் அவரது கணவர் பீட்டர் பால் இருவரும் கழுத்தில் கரன்சி மாலை அணிந்து பூஜை செய்தனர்.. எதற்காக தெரியுமா?

செய்திகள்

நடிகை வனிதா கரன்சி மாலையில் கணவருடன் போஸ் கொடுத்துள்ள போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.

நடிகை வனிதா விஜயக்குமார், கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, எலிசபெத் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்து வந்ததால், இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமீபத்தில் சற்று ஒய்ந்திருந்த நிலையில் தற்போது வனிதா வெளியிட்டிருக்கும் புகைப்படம் மீண்டும் மக்கள் மத்தியில் பேச்சுப் பொருளாக இருந்து வருகின்றது.

அதாவது, நடிகை வனிதா, வீட்டில் லட்சுமி குபேரன் பூஜை நடத்தியுள்ளார். கணவர் பீட்டர் பால் மற்றும் மகள்களுடன் இந்த பூஜையை நடத்தியுள்ளார் வனிதா. அந்த பூஜையில் நடிகை வனிதாவும் அவரது கணவர் பீட்டர் பாலும் கழுத்தில் கரன்சி மாலையுடன் பங்கேற்ற போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் வனிதா.

 

மேலும் அந்த போட்டோவுக்கு, ” வீட்டில் லட்சுமி குபேரன் பூஜை… 2020 ஆம் ஆண்டில் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவது ஒரு அதிசயம் தான்.. கடவுளால் மட்டும்தான் அதைச் செய்ய முடியும்.. அவருக்கு ஒரு திட்டம் உள்ளது, நான் அதனுடன் கண்மூடித்தனமாகப் போகிறேன்.

என் நம்பிக்கையும் நற்குணமும் என்னையும் என் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும். ஒருபோதும் மறக்க முடியாத ஒரு வருடம்.. நமக்கு வாழ்க்கையையும் கடவுளின் சக்தியையும் கற்று கொடுத்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.