தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் தான். இப்போது பிக்பாஸ் 4வது சீசன் போட்டியாளர்கள் ஆயுத பூஜை வீட்டில் கொண்டாடியுள்ளனர்.
அந்த நிகழ்ச்சி இன்று ஸ்பெஷலாக மாலை 6.30 மணியில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது.இனி எத்தனை சீசன் வந்தாலும் நம்மால் 1 சீசனை மறக்கவே முடியாது, அதுதான் உண்மை. அதில் இருந்த ஒரு ஈர்ப்பு மற்ற சீசன்களின் மேல் ரசிகர்களுக்கு இல்லை என்றே கூறலாம்.
முதல் சீசனில் வெற்றிப்பெற்றவர் ஆரவ். டைட்டிலை ஜெயித்த அவர் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வந்தார். கடந்த மாதம் அவருக்கு திருமணமும் நடைபெற்றது, முதல் சீசன் போட்டியாளர்களும் அவரது நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நடிகர் ஆரவ் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு,