பிக்பாஸ் சீசன் 4 ல் பிரபல தொகுப்பாளினி பங்கேற்பது சந்தேகமா?

செய்திகள்

பிரபல ரிவியில் வரும் ஞாயிறன்று தொடங்கவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜேவான அர்ச்சனா பங்கேற்பதில் சி க்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் கொரோனா பரிசோதனைக்கு பின்பு த னிமைப்படுத்தப்பட்டு நட்சத்திர ஹொட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


இதன் புகைப்படம் அவ்வப்போது வெளியாகி வைரலானது. இருப்பினும் போட்டியாளர்களின் பெயர்கள் நிகழ்ச்சியின் போது தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுவார்கள்.

அதுவரை காத்திருக்க வேண்டும் என்றாலும் இப்போதே நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் என பிக்பாஸில் பங்கேற்க போகும் போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்ட் என ஒரு பட்டியல் இணையத்தில் வலம் வருகிறது.

அதன்படி நடிகை சனம் ஷெட்டி, கேப்ரில்லா, நடிகை ரேகா, நடிகை ஷிவானி நாராயணன், நடிகை ரம்யா பாண்டியன், விஜே அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, பாடகர் அஜித், பாடகர் வேல்முருகன், நடிகர் பாலாஜி முருகதாஸ், நடிகர் சுரேஷ், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, நடிகர் அனுமோகன், மாடல் சோம்சேகர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களில் மேடையில் பர்ஃபார்மன்ஸ் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கான படப்பிடிப்பு கடந்த திங்கள் கிழமை நடைபெற்றதாகவும் இதில் சில பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.

இதில் பர்ஃபார்மன்ஸ் செய்ய காத்திருந்த பிரபல விஜேவான அர்ச்சனாவுக்கு அவர் பணிபுரியும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து அ ழுத்தம் தரப்பட்டதாகவும், இதனால் பெரிய பஞ்சாயத்து நடைபெற்று கடைசியில் அவர் பர்ஃபாமன்ஸ் செய்யாமல், நிறுவனத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் விஜே அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா என்பதில் ச ந்தேகம் எழுந்துள்ளது.